Thursday 7 February 2013

 பைரவரை எப்படி வழிபடுவது !!

பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் சிறந்த நாளாகும். ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும், பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். பைரவருக்கு பிடித்தமானது சந்தனகாப்பு.

இதில் வாசனை திரவியங்களான புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது சிறப்பாகும். சந்தனகாப்பு செய்வதால் ஒருகோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது.


பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தனமாலை அணிவித்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களை கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.


பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், தேன், செவ்வாழை, வெல்லப்பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பைரவரை காலையில் வழிபட சர்வநோய்களும் நீங்கும்.


பகலில் வழிபட விரும்பியது எல்லாம் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை கிட்டும்.


பைரவருக்கும் சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாக பிளந்து அதனுள் எண்ணை அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.
மாயப்பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்த ஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு.
ஞாயிற்றுக்கிழமை : ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடைமாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிபருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.
திங்கட்கிழமை : வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். செவ்வாய்க்கிழமை: மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்.
புதன்கிழமை: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும். வியாழக்கிழமை: விளக்கேற்றி வந்தால் ஏலம், பில்லி, சூன்யம் விலகும்.
வெள்ளிக்கிழமை: மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும்.
சனிக்கிழமை: சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை பிரத்தேயமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்

No comments:

Post a Comment